கோலாலம்பூர், ஏப்ரல்.15
லஞ்ச ஊழல் தொடர்பில் பெர்சத்து கட்சியின் தகவல் பிரிவு துணைத் தலைவர் முகமட் அலி முகமட், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டார்.
மலாக்கா, தங்கா பத்துவில் உள்ள முகமட் அலியின் வீட்டில் நேற்று மாலை 6.30 மணியளவில் கைது செய்யப்பட்டதை அவரின் வழக்கறிஞர் ராபிஃக் ரஷிட் உறுதிச் செய்தார்.
முன்னதாக, முகமட் அலியின் மனைவி மற்றும் பிள்ளைகளின் வாக்குமூலத்தை எஸ்பிஆர்எம் பதிவு செய்துள்ளனர். விசாரணைக்குப் பின்னர் இரவு 9 மணியளவில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
எஸ்பிஆர்எம் சட்டம் 16 ஆவது விதியின் கீழ் முகமட் அலி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான குற்றத்தன்மையை உடனடியாக அறிய முடியவில்லை.