அந்தத் தகவலை ஜேபிஎன் மறுத்தது

புத்ராஜெயா, ஏப்ரல்.15-

மைகாட் அட்டையில் 300 ரிங்கிட் பட்டுவாடா செய்யப்படுள்ளதாகக் கூறப்படுவதை தேசிய பதிவு இலாகாவான ஜேபிஎன் வன்மையாக மறுத்துள்ளது.

ஒவ்வொரு மைகாட் அட்டையிலும் ஜேபிஎன் தலா 300 ரிங்கிட் வரவு வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள தகவலில் உண்மையில்லை என்று ஜேபிஎன் விளக்கம் அளித்துள்ளது.

பொது மக்களுக்கு பண ரீதியாக எந்தவொரு ரொக்க உதவித் தொகையையும் ஜேபிஎன் வழங்கியது இல்லை. சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் அந்தத் தகவல் அடிப்படையற்றது. அதனை நம்ப வேண்டாம் என்று இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் ஜேபிஎன் தெளிவுபடுத்தியுள்ளது.

WATCH OUR LATEST NEWS