அமெரிக்காவில் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்

வாஷிங்டன், ஏப்ரல்.15

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கலிபோர்னியாவில் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியிருந்தது.

சான் டியாகோவிலிருந்து சுமார் 97 கி.மீ தொலைவில் இருக்கும் ஜூலியன் பகுதி, நிலநடுக்கத்தின் மையமாக இருந்தது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மக்கள் குறைவாக வசிக்கும் இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பெரியளவில் பாதிப்பு இருக்காது என அவர்கள் கூறினர்.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. அதே சமயம், பாதுகாப்பாகவும் விழிப்பு நிலையிலும் இருக்குமாறு கலிபோர்னியாவில் வசிக்கும் மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS