கோலாலம்பூர், ஏப்ரல்.15-
பினாங்கு மாநிலத்தைக் கிறிஸ்தவர்கள் ‘கைப்பற்ற’ முயற்சிக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பிரதமர் அன்வார் இப்ராஹிம் கடுமையாக விமர்சித்தார். சீன அரசியல் கட்சியின் செல்வாக்கு அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற குற்றச்சாட்டுகளுடன் இந்த கதை பரப்பப்படுகிறது என்று அவர் கூறினார்.
தாமும் பினாங்கைச் சேர்ந்தவன்தான். இவ்வாறானக் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறீர்கள், அதே சமயம், அவர்களைப் பற்றிய நல்ல செய்திகளை ஏன் நீங்கள் பகிர்வதில்லை? சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள் மத்தியில் கெட்டவர்களும் இருக்கிறார்கள். அதனால் என்ன? நமது மனசாட்சிக்கு ஏற்ப நல்லவர்களைத் தேர்ந்தெடுத்து பின்பற்றுங்கள்,” என்று அவர் கூறினார்.