உலங்கூர்தி உற்பத்தி தொழிற்சாலை – 16.45 பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மலாக்கா, ஏப்ரல்.15-

பத்து பெரெண்டாமில் அமைந்துள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் உலங்கூர்தி உற்பத்தி தொழிற்சாலையை உருவாக்க அரசாங்கம் 16.45 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்துள்ளது. மலாக்கா முதலமைச்சர் அப் ரவூப் யூசோ கூறுகையில், மலேசியா மட்டும் இன்றி தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய உலங்கூர்தி சேவை வழிநடத்துநர் நிறுவனமான Weststar Group, குழுமத்திற்கு இந்த தொழிற்சாலை கட்டுமான ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. 6.88 ஹெக்டேர் பரப்பளவில் மூன்று ஆண்டுகளில் இது கட்டப்படும் என்றார்.

உலங்கூர்தி உற்பத்தி தொழிற்சாலையைத் தவிர, இது உலங்கூர்தி பராமரிப்பு மையமாகவும் செயல்படும். இதில் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, முழுமையான சீரமைப்புச் சேவைகளும் அடங்கும். இப்பகுதியின் உலங்கூர்தி MRO மையமாக மாநிலத்தை மாற்றுவது, மாநில பொருளாதாரத்தை மேம்படுத்துவது, உள்ளூர் மக்களுக்கு குறிப்பாக விண்வெளித் துறையில் வேலை வாய்ப்புகளை வழங்குவது ஆகியவை இதில் அடங்கும். மலாக்காவில் Malaysian Flying Academy இருப்பதால், நாட்டின் வான்வழி போக்குவரத்து சேவைத் துறைக்கு ஆதரவளிக்கும் வகையில் ஆண்டுக்கு 1,500 உலங்கூர்திகளை உருவாக்கும் பொறுப்பும் Weststar Groupக்கு வழங்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS