முன் கூட்டியே கொண்டாட விரும்பவில்லை லிவர்பூல்

லிவர்பூல், ஏப்ரல்.25-

வரும் ஞாயிற்றுக்கிழமை இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டத்தில் லிவர்பூல், டோட்டன்ஹாம் ஹாட்ஸ்பரை சொந்த அரங்கில் எதிர்கொள்கிறது. 20வது பிரீமியர் லீக் (EPL) பட்டத்தை வெல்ல லிவர்பூலுக்குத் தேவைப்படுவது ஒரு புள்ளி மட்டுமே. 
 
இருப்பினும், முன் கூட்டியே எந்த கொண்டாட்டமும் இருக்காது என நிர்வாகி ஆர்னே ஸ்லாட் கூறியுள்ளார். வெற்றியாளராகப் பெருமை கொள்ள இறுதி விசில் வரை காத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். 
 
கடந்த ஆண்டு ஜூர்கன் க்ளோப்புக்கு பதிலாக வந்த ஸ்லாட், தமது திறமையை நிரூபித்துள்ளார். அவரது முதல் பருவத்திலேயே 34 ஆட்டங்களில் இருந்து 80 புள்ளிகளைப் பெற்று லீக் பட்டத்தை வெல்லும் நிலையை லிவர்பூல் நெருங்க அவர் உதவியுள்ளார்.  
 
இது ஒரு பெரிய பொறுப்பு. லிவர்பூல் கடைசியாக லீக்கை வென்றது கோவிட் காலத்தில் (2020 இல்) என்பதை அறிவோம். எனவே இந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள் என ஸ்லாட் கூறினர். 

46 வயதான அவர் தனது முதல் பருவத்திலேயே ஆரம்ப எதிர்பார்ப்புகளை மீறி விட்டார். இதுவரையிலான ஆட்டங்களில் லிவர்பூல் இரண்டு முறை மட்டுமே தோல்வி கண்டுள்ளது. ஓராட்டம் கூடுதலாகக் கைவசம் வைத்திருக்கும் லிவர்பூல் ஆர்சனலை விட 12 புள்ளிகள் வித்தியாசத்தில் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

WATCH OUR LATEST NEWS