பொன்னியின் செல்வன் 2 பாடல் காப்பி விவகாரம்…

ஏ.ஆர்.ரஹ்மான் உலக அளவில் பிரபலமான இசையமைப்பாளர். அவரது பாடல்களுக்கு என்றே ஒரு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. ரஹ்மான் தற்போது பதிப்புரிமை சர்ச்சையில் சிக்கி இருக்கும் நிலையில் நீதிமன்றத்தால் 2 கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டு இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் வரும் வீர ராஜ வீரா பாடலுக்கு எதிராக உஸ்தாட் பைஃயாஸ் வாசிபுஃடின் டாகார் என்பவரை வழக்கு தொடர்ந்து இருக்கிறார்.

உஸ்தாட் என் பைஃயாஸுடின் டாகார் மற்றும் உஸ்தாட் ஸஹிருடின் டாகார் ஆகியோர் உருவாக்கிய சிவா ஸ்துதி பாடலை அப்படியே பயன்படுத்தி இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது.

அந்தப் பாடலில் ஈர்க்கப்பட்டு உருவாக்கியதாக ரஹ்மான் தரப்பு கூறும் நிலையில், அந்த பாடலில் வரிகளை மட்டும் மாற்றங்கள் செய்து அப்படியே பயன்படுத்தி இருப்பதாக டெல்லி நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது.

மேலும் 2 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும், 2 லட்சம் ரூபாய் டாகார் குடும்பத்தின் வழக்குச் செலவுக்காகக் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

WATCH OUR LATEST NEWS