காவடிச் சடங்குப் பயிற்சிப் பட்டறை

ஜார்ஜ்டவுன், ஏப்ரல்.27-

காவடி எடுக்கும் பக்தர்கள் ஆகம சாத்திரத்தின்படி சரியான முறைகளை அறிந்துகொள்ளும் வகையில் காவடிச் சடங்குப் பயிற்சிப் பட்டறை ஒன்றை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் வெற்றிகரமாக நடத்தியது. இந்த முயற்சி ஆன்மீக ஒழுக்கத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஒரு பொதுவான புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கம் கொண்டது என அவ்வாரியம் குறிப்பிட்டது. .

இந்தப் பட்டறையுடன் இணைந்து, காவடிச் சடங்குடன் தொடர்புடைய மதத்திற்குப் புறம்பான அல்லது பொருத்தமற்ற செயல்களைக் கையாள்வதற்கும் தடுப்பதற்கும் ஒரு சிறப்பு பணிக் குழுவை பினாங்கு இந்து அறப்பணி வாரியம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இந்து மரபில் மிகவும் மதிக்கப்படும் சடங்குகளில் ஒன்றின் புனிதத்தைப் பாதுகாப்பதில் இந்த நடவடிக்கை முக்கியமானது.

பினாங்கு இந்து மதத்தின் முக்கிய விழுமியங்களைப் பாதுகாப்பதில் இவ்வாரியம் தொடர்ந்து உறுதியாக உள்ளது. அனைத்து இந்துக்களிடையேயும் இந்து அமைப்புகளிடையேயும் ஒற்றுமையை வளர்க்கும் அதே வேளையில், சரியான மத நடைமுறைகளைப் பாதுகாப்பதும், மேம்படுத்துவதும் தங்களின் தெளிவான நோக்கமாகும் என அவ்வாரியம் மேலும் கூறியது. கூட்டு முயற்சியால், மத நம்பிக்கையும் பழக்க வழக்கங்களும் தலைமுறை தலைமுறையாக மரியாதையுடனும் கண்ணியத்துடனும் நிலைநிறுத்தப்படுவதை உறுதிப்படுத்தப் பாடுபடுவதாகவும் அவ்வாரியம் குறிப்பிட்டது.

WATCH OUR LATEST NEWS