மணிலா, ஏப்ரல்.28-
பிலிப்பின்ஸின் மத்தியப் பகுதியில் உள்ள புலுசான் எரிமலை குமுறியது. அதனால் சுமார் 4.5 கிலோமீட்டர் உயரத்திற்கு வானில் கரும் புகை சூழ்ந்தது. புலுசான் எரிமலைக்கு அருகில் உள்ள பகுதியிக் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அவர்களுக்கு ஆலோசனை கூறப்பட்டுள்ளது.
தற்போது எரிமலையின் சீற்றம் சற்று தணிந்துள்ள நிலையில், அது பின்னர் மீண்டும் குமுறலாம் என எரிமலை ஆய்வு நிபுணர்கள் கணித்துள்ளனர்.