ஸ்வீடனில் துப்பாக்கிச் சூடு: மூவர் பலி

உப்சாலா, ஏப்ரல்.30-

ஸ்வீடன் நாட்டின் உப்சாலா நகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.

உப்சாலா நகரின் வக்சலா சதுக்கத்தில் உள்ள சலூன் கடையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. துப்பாக்கிச் சூடு சப்தத்தைக் கேட்டு போலீசாருக்கு அங்குள்ள மக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் துப்பாக்கிச் சூடு குறித்து விசாரித்து வருகின்றனர். ஐந்து முறை துப்பாக்கிச் சூடு சப்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS