வெற்றியாளரானார் ஐரா அஸ்மான்

டெவன்ஷயர், ஏப்ரல்.04-

2025 இளையோர் ஸ்குவாஷ் போட்டியில் தேசிய வீராங்கனை ஐரா அஸ்மான் வாகை சூடியுள்ளார். இறுதியாட்டத்தில் அவர் எகிப்திய வீராங்கனை ஹனா மோட்டாஸை வீழ்த்தினார். உலகத் தர வரிசையில் 30 ஆவது இடத்தில் இருக்கும் ஐரா, 3க்கு சுழியம் என்ற புள்ளிகளில் வெற்றி பெற்றார்.

அவர் அவ்வெற்றியைப் பதிவு செய்ய எடுத்துக் கொண்ட நேரம் 27 நிமிடங்கள் மட்டுமே. அந்த வெற்றியானது அனைத்துலக ஸ்குவாஷ் அரங்கில் அவரது நிலையை உயர்த்தியிருக்கிறது. அரையிறுதியில் ஐரா, தமது சகோதரியான ஐஃபா அஸ்மானைத் தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

WATCH OUR LATEST NEWS