பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நுருல் இஸா போட்டியிட வேண்டும்

கோலாலம்பூர், மே.06-

இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு உதவித் தலைவர் நுருல் இஸா அன்வார் போட்டியிட வேண்டும் என்று தொகுதித் தலைவர்கள் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றனர்.

பிரதமரும், பிகேஆர் கட்சியின் தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மூத்தப் புதல்வியான நுருல் இஸா, நீண்ட காலமாகவே கட்சியில் உதவித் தலைவராகப் பொறுப்பில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் கட்சியின் இரண்டாவது மிக உயரிய பதவியான துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று பிகேஆர் கட்சியில் இதுவரை 5 தொகுதிகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.

மலாக்கா, ஹாங் துவா ஜெயா, அலோர் காஜா, தங்கா பத்து, ஜாசின் மற்றும் கோத்தா மலாக்கா ஆகிய தொகுதிகள் மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளன.

WATCH OUR LATEST NEWS