நூருல் இஸாவிற்கு சிலாங்கூர் முழு ஆதரவு

ஷா ஆலாம், மே.07-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை மே 8 ஆம் நடைபெறவிருக்கும் வேளையில் கட்சியின் உதவித் தலைவர் நூருல் இஸா அன்வார், தேசிய துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு சிலாங்கூர் மாநில பிகேஆர் தொடர்புக்குழு முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது.

பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வியான நூருல் இஸா, தேசியத் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவதற்கு சிலாங்கூர் பிகேஆர் கட்சியின் 18 தொகுதித் தலைவர்கள் தங்களின் பிளவுப்படாத ஆதரவை நல்கியிருப்பதாக மாநில மந்திரி பெசாரும் மாநில பிகேஆர் தலைவருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

கட்சியின் இரண்டாவது உயர் பதவியான தேசியத் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஸா போட்டியிடுவதற்கு சிலாங்கூர் மாநில பிகேஆர் தலைவர் என்ற முறையில் தாம் முழு ஆதரவு நல்குவதாக அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS