கோலாலம்பூர், மே.07-
இம்மாதம் நடைபெறவிருக்கும் பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தேசியத் துணைத் தலைவருக்குத் தாம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், கட்சி சார்பில் தாம் வகித்து வரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக கட்சியின் துணைத் தலைவர் ரபிஃஸி ரம்லி அறிவித்துள்ளார்.
பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின்னர் கட்சியின் அடிமட்ட உறுப்பினர்களின் நலன் சார்ந்த விவகாரங்களைக் கவனிக்கப் போவதாக இன்று அறிவித்துள்ளார்.
பிகேஆர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மே 8 ஆம் தேதி நடைபெறும் நிலையில் ரபிஃஸி ரம்லி இதனைத் தெரிவித்துள்ளார்.