நூருல் இஸாவிற்கு ஆதரவு பெருகி வருகிறது

கோலாலம்பூர், மே.08-

பிகேஆர் கட்சியின் உயர் மட்டத் தலைவர்களுக்கான தேர்தல் வேட்புமனுத் தாக்கல் மே 9 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் பிகேஆர் கட்சியின் தலைவரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் புதல்வி நூருல் இஸா அன்வார், கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என்று ஜோகூர் வலியுறுத்தியுள்ளது.

கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் நூருல் இஸாவே கட்சியின் துணைத் தலைவருக்குப் பொருத்தமான வேட்பாளர் என்று ஜோகூர் மாநிலத்தில் உள்ள 22 தொகுதித் தலைவர்கள் தங்கள் பிளவுப்படாத ஆதரவை நல்கியுள்ளனர்.

சிலாங்கூர் மற்றும் சபாவிற்கு அடுத்து மற்றொரு மிகப் பெரிய மாநிலமான ஜோகூர், நூருல் இஸாவிற்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS