தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டி

புத்ராஜெயா, மே.09-

பிகேஆர் கட்சியின் தலைவர் என்ற முறையில் நடைபெறவிருக்கும் கட்சியின் உயர்மட்டத் தலைவர்களுக்கான தேர்தலில் தலைவர் பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடப் போவதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அன்வாரை எதிர்த்துப் போட்டியிடுவதற்கு எந்தவோர் உறுப்பினரும், தலைவரும் பிற்பகல் 2 மணி வரையில் எந்தவொரு வேட்புமனுவையும் தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது.

பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்மனுத் தாக்கல் நேற்று மே 8 ஆம் தேதி தொடங்கி இன்று 9 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.

தலைவர் பதவிக்கு டத்தோஸ்ரீ அன்வார், போட்டியின்றி வெற்றி பெறுவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

WATCH OUR LATEST NEWS