புத்ராஜெயா, மே.09-
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம்மின் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கியின் பதவிக் கால ஒப்பந்தம், இம்மாதம் 12 ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், அவரின் பதவிக் காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதனை அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஶ்ரீ ஷாம்சூல் அஸ்ரி அபு பாக்கார் அறிவித்துள்ளார்.
அஸாம் பாக்கியின் பதவிக் காலத்தை நீட்டிக்க மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் ஒப்புதல் வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிப்பு, மே 13 ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டான் ஶ்ரீ ஷாம்சூல் தெரிவித்துள்ளார்.