புத்ராஜெயா, மே.09-
நான்கு வயது மகளைப் பராமரிக்கும் உரிமையைத் தனது மனைவிக்கு வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நபர் ஒருவர் செய்து கொண்ட மேல்முறையீட்டை புத்ராஜெயா, அப்பீல் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
குழந்தையின் தந்தையான 38 வயது ஆர். கண்ணன் செய்து கொண்ட மேல்முறையீட்டில் நடைமுறை ரீதியாக அடிப்படை குறைபாடுகள் இருப்பதாகக் கூறி, அப்பீல் நீதிமன்ற நீதிபதி அஸிஸா நவாவி தலைமையிலான மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர் ஏகமனதாக முடிவெடுத்து அந்த மேல்முறையீட்டை தள்ளுபடி செய்தனர்.
மகளைப் பராமரிக்கும் உரிமையை, தனது மனைவியான 32 வயது வீ. தேவித்ராவிற்கு வழங்கியிருக்கும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கண்ணன் இந்த மேல்முறையீட்டை செய்து இருந்தார்.