தவறு இழைத்த முதலாளிகளுக்கான சொக்சோவின் மன்னிப்பு காலக்கெடு மே 31 வரை நீட்டிப்பு

கோலாலம்பூர், மே.09-

சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோவின் கீழ் தங்கள் தொழிலாளர்களைப் பதிவு செய்யாத மற்றும் நிலுவையில் உள்ள சந்தாப் பணத்தைச் செலுத்தாத முதலாளிமார்கள், அதற்கு உடனடியாத் தீர்வு காண்பதற்கு மன்னிப்பு மாத கால அவகாசம் வரும் மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்துள்ளார்.

மன்னிப்பு வழங்கும் வகையிலான இந்த கால அவகாச நீட்டிப்பில் அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையில் 50 விழுக்காடு வரை கழிவு வழங்கப்படும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் விளக்கினார்.

எனினும் சொக்சோ சந்தா செலுத்தாத வழக்கு, நீதிமன்ற நடவடிக்கை, தொழிலைப் பதிவு செய்யாதது, அபராதம் விதிக்கப்பட்டது, தொழில் விபத்துகளைத் தாமதமாக அறிவித்தது போன்ற பிரச்னைகளில் சிக்காதவர்களுக்கு மட்டுமே இந்த சலுகைப் பொருந்தும் என்று அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இந்த சலுகை 100 மில்லியன் சந்தாப் பாக்கியை வைத்துள்ள 2 லட்சத்து 15 ஆயிரத்து 171 முதலாளிகளை உட்படுத்தியதாகும் என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS