புதுடெல்லி, மே.09-
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதால் டில்லி விமான நிலையத்தில், கடந்த 2 நாட்களில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
இரு நாடுகளுக்கு இடையில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு, பஞ்சாப், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உள்ள இந்திய நகரங்கள் மீது பாகிஸ்தானின் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டங்கள் மேலும் அதிகரித்தன.
இதன் எதிரொலியாக கடந்த 2 நாட்களில், டில்லி சர்வதேச விமான நிலையத்தில் 228 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.