சிபு, மே.10-
கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வெட்டுமர லோரியின் அடியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் காரைச் செலுத்திய மாது, காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இச்சம்பவம் நேற்று இரவு 8.30 மணியளவில் சரவாக், ஜாலான் செலாஙாவ்-சிபு, நாஙா லெபாலில் நிகழ்ந்தது. லோரியின் முன்புற மற்றும் பின்புற டயர்களுக்கு இடையில் லோரியின் அடியில் கார் சிக்கிக் கொண்ட போதிலும் சம்பந்தப்பட்ட மாது இடிபாடுகளுக்கு இடையில் சிக்கவில்லை என்று தீயணைப்பு, மீட்புப்படையின் சிபு பிராந்தியத்திற்கான தலைவர் ஏண்டி அலீ தெரிவித்தார்.
லோரியில் ஏற்றப்பட்டு இருந்த வெட்டு மரங்களை அகற்றாமல், பிரத்தியேகமானச் சாதனங்களைப் பயன்படுத்தி 48 வயதுடைய அந்த மாது பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.