புத்ராஜெயா, மே.10-
வர்ததகப் பெண்மணி டத்தின் ஶ்ரீ பமேலா லிங்கிற்கு மலேசிய உழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கடும் நெருக்குதல் அளித்ததாகக் கூறப்படுவதை அந்த ஆணையம் வன்மையாக மறுத்துள்ளது.
தனது கணவர் சம்பந்தப்பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான விசாரணைக்கு வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட 42 வயதுடைய அந்த பெண்மணியிடம் லஞ்ச ஊழல் பற்றி விசாரிக்காமல் கணவனிடமிருந்து விவகாரத்து பெறும் மண முறிவு தொடர்பான அறிவுறுத்தலை எஸ்பிஆர்எம்மின் இயக்குநர் ஒருவர் வலியுறுத்தியுள்ளதாக மனித உரிமை வழக்கறிஞர் சித்தி ஸாபேடா காசிம் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.
எனினும் டத்தின் ஶ்ரீ பமேலா சம்பந்தப்பட்ட எஸ்பிஆர்எம் விசாரணையில் அந்த அதிகாரி அறவே சம்பந்தப்பட்டவில்லை என்று எஸ்பிஆர்எம் ஓர் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.
வர்த்தகர் ஒருவரின் மனைவியான பமேலா, கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதி எஸ்பிஆர்எம் விசாரணைக்காக புத்ரா ஜெயாவிற்கு செல்வதாகக் கூறிச் சென்றவர், பின்னர் தனிநபர்களால் கடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பமேலா கடத்தல் தொடர்பில் விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழுவை புக்கிட் அமான் போலீஸ் தலைமையகம் அமைத்துள்ளது.