விஜய் டிவி பல நகைச்சுவை நிகழ்ச்சிகளைக் கொடுத்து மக்கள் மனதில் இடம் பிடித்து வருகிறது. இதில் முக்கியமானது என்றால் பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி எனலாம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி காமெடியுடன் சேர்ந்து கலாட்டா பண்ணும் அளவிற்கு போட்டியாளர்களும் கோமாளிகளும் சேர்ந்து அட்டகாசம் செய்து மக்களை மகிழ்விப்பார்கள். வெங்கட் பட் மற்றும் தாமு இருக்கும் வரை அந்நிகழ்ச்சி பெரும் பரபரபாகப் பேசப்பட்டது, பார்க்கப்பட்டது.
வெங்கட் பட் எப்பொழுது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விட்டு விலகினாரோ அப்பொழுதே மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த நிகழ்ச்சியைp பார்ப்பதைக் குறைத்து விட்டார்கள். என்றாலும் மாதம்பட்டி ரங்கராஜ், செப் கௌஷிக், தாமு ஆகியோரை வைத்து சீசன் 6 நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள்.
ஆனால் இதற்குப் போட்டியாக இன்னும் ஒரு சில வாரங்களில் சன் டிவியில் டாப்பு குக் டூப்பு குக் நிகழ்ச்சி ஆரம்பமாக போவதாக செஃப் வெங்கட் பட் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். இது அவரது ரசிகர் பட்டாளத்திற்கு நிச்சயம் மகிழ்வூட்டும் செய்தியாக இருக்கும். கூடிய விரைவில் டாப்பு குக் டூப்பு குக் சீசன் 2 ஆரம்பமாகலாம்.