கோவில் ஒன்றின் வேலியை மோதிய தோட்ட மேலாளர் காயம்

தெமர்லோ, மே.13-

பிக்கப் வாகனம் ஒன்று, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, கோவில் வேலியில் மோதியதில் தோட்ட மேலாளர் ஒருவர் காயமுற்றார். இச்சம்பவம் இன்று காலையில் பகாங், ஜாலான் காராக்- மெந்தாகாப் சாலையின் ஒன்றாவது கிலோ மீட்டரில் தெமர்லோ அருகில் நிகழ்ந்தது.

இதில் 76 வயதுடைய மேலாளர் காயமுற்றதாக தெமர்லோ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி மஸ்லான் ஹசான் தெரிவித்தார். லஞ்சாங்கில் உள்ள தோட்டத்திற்குச் சென்று விட்டு, மெந்தகாப், தாமான் டேசா ஜெயாவில் உள்ள தனது வீட்டிற்குத் திரும்பிக் கொண்டு இருந்த போது இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS