இந்தியா- பாகிஸ்தான் நிலவரங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன

புத்ராஜெயா, மே.13-

இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவும் சூழ்நிலையை வெளியுறவு அமைச்சு அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. குறிப்பாக பல முக்கிய விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தடைபட்டு இருப்பது மற்றும் வான்வெளி மூடப்பட்டதைத் தொடர்ந்து மலேசியர்களின் பாதுகாப்பு தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா தெரிவித்துள்ளது.

புது டில்லி மற்றும் இஸ்லாமாபாத்தில் உள்ள மலேசியத் தூதரகங்களும், அந்தந்த நாடுகளில் உள்ள துணைத் தூதரக அலுவலகங்களும் மலேசியர்களுக்குத் தேவையான உதவிகளை நல்கி வருகின்றன.

இந்தியாவில், 350க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கும், பாகிஸ்தானில், 100க்கும் மேற்பட்ட மலேசியர்களுக்கும் வெற்றிகரமாக உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் அவர்கள் விரைவில் தாயகம் திரும்பத் திட்டமிட்டுள்ளனர்.

எல்லைப் பகுதி நகரங்களில் உள்ள மலேசியர்கள், அத்தியாவசியமற்றப் பயணங்களை ஒத்தி வைத்து, அருகிலுள்ள மலேசியத் தூதரங்களில் உடனடியாகத் தங்கள் இருப்பைப் பதிவுச் செய்து கொள்ளுமாறு விஸ்மா புத்ரா கேட்டுக் கொண்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS