மலாக்கா, மே.13-
கேபல்களைத் திருடிக் கொண்டு, ஹைலெக்ஸ் ரக வாகனத்தை எதிர்த்திசையில் செலுத்தி, சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை தப்பி ஓடிய இளைஞர், போலீசாரால் விரட்டிப் பிடிக்கப்பட்ட சம்பவத்தில், பிடிபட்ட நபர், மலாக்கா, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
29 வயது டி. கிருபாகரன் என்ற அந்த இளைஞர் இரண்டு வெவ்வேறு நீதிமன்றங்களில் நிறுத்தப்பட்டு 6 குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட இளைஞர், கடந்த மே 6 ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் மலாக்கா, செங்கில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கேபள் திருடியது, எதிர்த்திசையில் வாகனத்தைச் செலுத்தியது, போலீசாரிடமிருந்து தப்பிக்க முயற்சி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த நபர் எதிர்நோக்கியுள்ளார்.