தெலுக் இந்தான், மே.13-
விபத்தில் ஒன்பது ஃஎப்ஆர்யூ போலீஸ்காரர்கள் மரணம் அடைவதற்குக் காரணமாக இருந்த கற்களை ஏற்றி வந்த லோரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க அந்த லோரி ஓட்டுநர், சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் போதைப்பொருள் உட்கொள்ளவில்லை என்பது தெரியவந்தது.
எனினும் போதைப்பொருள் தொடர்பில் அவர் ஏற்கனவே 6 பழையக் குற்றப்பதிவுகளைக் கொண்டுள்ளார் என்று பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ நோர் ஹிசாம் நோர்டின் தெரிவித்தார்.
அந்த லோரி ஓட்டுநர், 1987 ஆம் ஆண்டு போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.