லங்காவி, மே.19-
உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் பெருவிழாவான 2025 ஆம் ஆண்டுக்கான லீமா கண்காட்சியில் பங்கேற்பதிலிருந்து இந்தியா மீட்டுக் கொண்டுள்ளது.
கடல்சார் மற்றும் ஆகாயக் கண்காட்சியான லீமா தொடங்கப்பட்டதிலிருந்து தனது பங்களிப்பை வழங்கி வந்த இந்தியா, முதல் முறையாக அப்போட்டியில் தனது பங்கேற்பை மீட்டுக் கொண்டுள்ளது.
இந்தியாவின் சூரிய கிரண், இந்த முறை லங்காவியில் தோன்றாது என்று இந்தியா தெரிவித்துள்ளதாக தற்காப்பு அமைச்சர் டத்தோ ஶ்ரீ முகமட் காலிட் நோர்டின் அறிவித்துள்ளார்.