கோலாலம்பூர், மே.19-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவைச் சேர்ந்த ஏரோன் சியா- சோ வூய் யிக் மீண்டும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளனர். அண்மையில்தான் அவ்விருவரும் தாய்லாந்து பொது பூப்பந்து போட்டியில் வாகை சூடினர். அடுத்து அவர்கள் மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டிக்குத் தயாராகின்றனர்.
தங்கள் மீது ரசிகர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை உடைக்காமல் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்ய கடுமையான உழைப்பு தேவை என அவ்விருவரும் தெரிவித்தனர். எனவே களைப்பாக இருந்தாலும், பயிற்சி மிக முக்கிய என அவ்விருவரும் குறிப்பிட்டனர்.
மலேசிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டி நாளை தொடங்கி மே 25 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உலகத் தர வரிசையில் ஐந்தாம் இடத்தில் இருக்கும் ஏரோன் சியா-சோ வூய் யிக் ஜோடி முதல் சுற்றில் தைவான் இணையுடன் களம் காண்கின்றனர்.