குவாந்தான், மே.25-
பகாங், குவாந்தான் பாஞ்சிங், குவா சாராஸில் உள்ள மகா ஜலலிங்கேஸ்வரர் கோவில் தற்போது மலேசிய இந்து அமைப்புகள், கோவில்கள் சங்கமான மஹிமாவில் இணைந்தது. அதனை அங்கீகரிக்கும் வகையில் மஹிமா உறுப்பியச் சான்றிதழை, கோவிலின் நிர்வாகத்திற்கு வழங்கினார் மஹிமாவின் தலைவர் டத்தோ என். சிவகுமார்.

மேலும், கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டிலும் சிவகுமார் கலந்து கொண்டார்.

கோவில்கள் இடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், இந்து சமூகத்தை மேம்படுத்துவதற்கும் மஹிமாவின் முயற்சிகளுக்கு ஜலலிங்கேஸ்வரர் கோவில் தீவிரமாக ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த நிகழ்வு பக்தர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்று, வெற்றிகரமானதாக அமைந்தது.
