தமிழ் சினிமாவில் அண்மையில் வெளியான படங்களில் பெரிதும் பேசப்படும் திரைப்படம் டூரிஸ்ட் பேஃபிலி. 3வது வாரத்தைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் இப்படம் ரூ. 75 கோடியைத் தாண்டி அதிக வசூல் செய்து வருகிறது.
டூரிஸ்ட் பேஃமிலி படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடிப்பில் ப்ரீடம் என்ற படம் தயாராகியுள்ளது. கழுகு படத்தை இயக்கிய சத்ய சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோஸ் ஜோஷ் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார்.
டூரிஸ்ட் பேஃமிலி எப்படி இலங்கைப் பின்னணிக் கொண்ட கதையாக அமைந்ததோ அதே போல் இந்தப் படமும் இலங்கையில் 90களில் உண்மையாக நடைபெற்ற ஒரு சம்பவத்தினை அடிப்படையாகக் கொண்டதாம். அதாவது ராஜீவ்வை கொல்ல அனுப்பப்பட்ட மனித வெடிகுண்டு பெண்ணின் கதை என்பதை டீசரிலேயே வெளியிட்டிருந்தார்கள்.
தற்போது படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.