பெர்லின், மே.25-
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னால் ஒரு பெரிய சதி இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புவிசார் அரசியல், புவி பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப மையம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து தெரிவித்த போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பஹல்காம் தாக்குதலின் முக்கிய நோக்கம் மக்களிடையே பயத்தை ஏற்படுத்துவதும், காஷ்மீரில் வளர்ந்து வரும் சுற்றுலாத் துறையைச் சீர்குலைப்பதும், நாட்டில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டுவதும் ஆகும்.
மேலும், பயங்கரவாதத்தை இந்தியா ஒரு போதும் சகித்துக் கொள்ளாது. அணு ஆயுத அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது. பயங்கரவாதத்தை அரசு ஆதரவு கொள்கையாகப் பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்கிறது.
தொடர்ந்து பாகிஸ்தானுடனான விவகாரங்களில் மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்திற்கு இடமில்லை என்றும் இது தொடர்பாக யாருக்கும் எந்தவிதமான தவறான எண்ணங்களும் இருக்கக்கூடாது என்றும் போர் நிறுத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தலையீடு இல்லை என்றும் அவர் குரிப்பிட்டார்.