சுங்கை பட்டாணி, மே.25-
கடந்த மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆடவர் ஒருவர், வழிப்பறிச் சம்பவத்தில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்டு, நேற்று மீண்டும் கைது செய்யப்பட்டார். கோலா மூடா மாவட்ட காவல்துறைத் தலைவர், உதவி ஆணையர் ஹன்யான் ரம்லான் இக்கைது குறித்து தெரிவிக்கையில், 28 வயதான அந்த நபரும் அவரது 29 வயது கூட்டாளியும் கடந்த மே 20 ஆம் நாள் ஓப் செந்தாப் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
கேங் ஏமி என அறியப்படும் இந்த இரு சந்தேக நபர்களும் பெண்களைக் குறிவைத்துக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்த கைது மூலம், இம்மாவட்டத்தில் நடந்த நான்கு பறிப்பு வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன.