சுபாங் ஜெயா, ஜூன்.08-
லகூன் பெர்டானாவில் வெளிநாட்டு வியாபாரிகள் தொடர்ந்து சாலையோரக் கடைகளை நடத்தி வருவதாக ஹரியான் மெட்ரோ செய்தி வெளியிட்டுள்ளது. காலை, மாலை என இரு வேளைகளிலும் லாரிகளில் இறைச்சி, கோழி, மீன், காய்கறிகள் போன்றவற்றை இவர்கள் விற்பனை செய்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த நடவடிக்கையால், சுபாங் ஜெயா மாநகராட்சி மன்றத்திற்கு பல புகார்கள் சென்றுள்ளதாக லகூன் பெர்டானா பகுதியின் ருக்குன் தெதாங்கா தலைவர் முகமட் ஃபைருஸ் அஹ்மாட் ஜாஹாரி தெரிவித்தார்.
வெளிநாட்டு வியாபாரிகள் மீது அபராதம் விதிக்கப்பட்டும், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், தடைப் பட்டைகள் கட்டப்பட்டும், அவர்கள் மீண்டும் அதே இடத்தில் தொடர்ந்து வியாபாரம் செய்து வருவதால், உள்ளூர்வாசிகள் அசௌகரியத்தை உணர்கின்றனர் என அவர் மேலும் சொன்னார்.