ஈப்போ, ஜூன்.11-
உலு பேராக், ஜெலி-கெரிக் வடக்கு மேற்கு சாலையின் 53 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் காயமுற்றவர்களில் 18 பேர், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சோங் மாலிம், உப்சி கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்த வேளையில் மற்றவர்கள் அனைவரும் கடுமையாகக் காயமுற்றனர்.
இன்று காலை 10 மணி வரை கிடைக்கப் பெற்றத் தகவலின்படி, 18 பேர் வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 15 பேர், தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பத்து பேர், தைப்பிங் மருத்துவமனையிலும், இருவர், ஈப்போ ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனையிலும், எஞ்சிய மூவர், கெடா, பாலிங் மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
அந்த 15 பேருக்கு கடும் காயங்கள் ஏற்பட்ட போதிலும் யாரும், தீவிர கண்காணிப்பு வார்டுகளில் அனுமதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.