கைதி 2 டில் அனுஷ்கா நடிக்கிறாரா?

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி படம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகி மற்றும் பாடல்கள் இடம் பெறவில்லை. ஆனாலும் படம் வெற்றியடைந்தது. லோகேஷின் இயக்கமும் பலராலும் பேசப்பட்டது.

இப்போது லோகேஷ் கூலி படத்தை எடுத்து வரும் நிலையில் அடுத்ததாக கைதி 2 படத்தை எடுக்க உள்ளார். இதில் கார்த்திக் கதாநாயகனாக நடிக்குமு நிலையில் அனுஷ்காவை நடிக்க வைக்க படக்குழு அணுகியதாக தகவல் வெளியாகியிருந்தது.

ஏற்கனவே கார்த்தி உடன் இணைந்து அலெக்ஸ் பாண்டியன் படத்தில் அனுஷ்கா நடித்திருக்கிறார். மீண்டும் இந்தக் கூட்டணி இணைய உள்ளதா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. கைதி 2 படத்தில் அனுஷ்கா பெண் தாதாவாக நடிக்க உள்ளதாகத் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் படக்குழு தரப்பிலிருந்து அனுஷ்காவை யாரும் அணுகவில்லை என்று அவரது நெருங்கிய வட்டாரத்தில் உள்ளவர்கள் கூறுகின்றனர்.

ஆகையால் கைதி 2 படமும் கதாநாயகி இல்லாமல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஒரே திரையில் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மோதிக் கொள்ளவிருக்கின்றனர். அதோடு படத்தில் இன்னொரு சுவாரஸ்யமான விஷயமாக கமல் விக்ரம் கதாப்பாத்திரத்தில் வரவிருக்கிறார்.

WATCH OUR LATEST NEWS