எஸ்டிஆர் 50 படத்திற்கு முன் தேசிங் பெரியசாமி இயக்கும் படம்

நடிகர் சிலம்பரசன் அண்மையில் தக் லைஃப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். திரைப்படம் மக்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கப் போவதாக படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்நிலையில் தற்பொழுது சிம்பு வெற்றி மாறன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருவதால், தேசிங் பெரியசாமி அடுத்து மணிகண்டனை வைத்து ஒரு சிறிய பட்ஜெட்டில் திரைப்படத்தை இயக்குவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 50-வது திரைப்படத்தை இயக்குவார். மணிகண்டன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்குள் சிம்பு, வெற்றி மாறன் மற்றும் அஷ்வத் மாரிமுத்து இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

WATCH OUR LATEST NEWS