தலைமை செயலாக்க அதிகாரிக்கு ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம்

கோலாலம்பூர், ஜூன்.25-

சுங்கை பீசி- உலு கிளாங் அடுக்கு நெடுஞ்சாலை நிர்மாணிப்புத் திட்டத்தில் சதுனாஸ் தெக்னோலோஜிஸ் நிறுவனத்திடமிருந்து 90 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் பெற்றதை ஒப்புக் கொண்ட புரோலிந்தாஸ் நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி ரொஸ்தாம் ஷாரிஃப் தாமிக்கு கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் விதித்தது.

2009 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அந்த தலைமை செயல்முறை அதிகாரி, தாம் பெற்ற லஞ்சம் குறித்து நிறுவனத்திற்குத்க் தெரியப்படுத்தத் தவறி விட்டதாகக் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் ஒரு லட்சம் ரிங்கிட் அபராதம் அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட ரொஸ்தாம் ஷாரிஃப் தாமியின் வாதத் தொகுப்பைச் செவிமடுத்த பின்னர் சிறைத் தண்டனைக்கு பதிலாக கூடியபட்சம் அபராதத் தொகையை விதிப்பதாக நீதிபதி ரொஸ்லி அஹ்மாட் தனது தீர்ப்பில் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS