காலிறுதிக்கு முன்னேறியது பாயர்ன் முனிக்

வாஷிங்டன், ஜூன்.30-

ஜெர்மனிய அணியான பாயர்ன் முனிக், கிளப்புகளுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஆகக் கடைசியான 16 அணிகள் சந்திக்கும் ஆட்டங்களில் ஒன்றில் அது பிரேசிலின் ஃபிளமெங்கோவை 4க்கு 2 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்தது.

முற்பாதி ஆட்டத்தில் பாயர்ன் மூன்று கோல்களை அடித்த வேளை, ஃபிளமெங்கோ ஒரு கோலைப் பெற்றது. பிற்பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் புகுத்திய நிலையில், ஆட்டம் 4க்கு 2 என பாயர்னுக்குச் சாதகமாக அமைந்தது.

அவ்வெற்றியின் மூலம் பாயர்ன் முனிக் காலிறுதிக்கு முன்னேறியது. அச்சுற்றில் பாயர்ன், பாரிஸ் செயிண்ட் ஜெர்மைனைச் சந்திக்கக்கூடும்.

இவ்வேளையில் மற்றோர் ஆட்டத்தில் பிஎஸ்ஜி, இண்டர் மியாமியை 4-0 என வெற்றி கொண்டது. அதனைத் தொடர்ந்து கோல் மன்னன் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான இண்டர் மியாமி காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

WATCH OUR LATEST NEWS