ஐரோப்பிய ஜாம்பவான்கள் வெளியேற்றம்

வாஷிங்டன், ஜூலை.01-

ஐரோப்பிய ஜாம்பவான்களான மான்செஸ்டர் சிட்டியும் இண்டர் மிலானும் கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளன.

சிறந்த 16 அணிகள் சந்திக்கும் சுற்றில் இண்டர் மிலான், பிரேசிலிய கிளப்பான ஃபுலுமினென்ஸ் ஒன்றிடம் சுழியத்திற்கு 2 என்ற கோல்களில் தோல்வி கண்டது. ஆட்டத்தின் மூன்றாவது நிமிடத்திலும் 93 ஆவது நிமிடத்திலும் ஃபுலுமினென்ஸின் இரு கோல்கள் போடப்பட்டன. அடுத்த ஆட்டத்தில் அக்கிளப் அல்-ஹிலால் கிளப்புடன் மோதவுள்ளது.

இதனிடையே, மான்செஸ்டர் சிட்டி, 3க்கு 4 என்ற கோல்களில் சவுதி அரேபிய கிளப்பான அல் ஹிலாலிடம் தோல்வியுற்றது. அவ்வாட்டம் பரபரப்பு மிக்கதாக இருந்தது. ஆட்டம் 3க்கு 3 என சமநிலையில் முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட வேளை, 112 ஆவது நிமிடத்தில் அல்-ஹிலால் மேலும் ஒரு கோலைப் புகுத்தி வெற்றியடைந்தது.

WATCH OUR LATEST NEWS