தாய்லாந்து பிரதமர் பதவியிலிருந்து Paetongtarn Shinawatra நீக்கம்

பாங்காக், ஜூலை,01-

தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றம், Paetongtarn Shinawatra- வை, பிரதமர் பதவியிலிருந்து இன்று தற்காலிகமாக நீக்கியுள்ளது.

38 வயது Shinawatra , அண்மையில், கம்போடியாவின் முன்னாள் தலைவர் ஹுன் சன்னிடம் தொலைப்பேசியில் பேசியிருந்தார். அந்தத் தொலைபேசி உரையாடல் சமூக ஊடகத்தில் கசிந்து பெரும் சர்ச்சையாக மாறியது.

இந்தச் சர்ச்சையால் Shinawatra பதவிக்கும் ஆட்சிக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபித்த Shinawatra வை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் குரல் எழுப்பினர்.

இதையடுத்து 36 செனட் உறுப்பினர்கள் தாய்லாந்தின் அரசமைப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

மனுவில் Shinawatra நேர்மை இல்லாமல் நடந்து கொண்டார், தெரிந்தே சட்டத்தை மீறினார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்நிலையில், அந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அவரை பிரதமர் பதவிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS