கூலிம் பாயா பெசார் நான்கு முஞ்சந்தியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் 62 வயதுடைய மாது ஒருவர் சம்பவம் இடத்திலே மரணம் அடைந்ததாக கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சாலே தெரிவித்தார் .
நேற்று மாலை 6.50 மணி அளவில் பாயா பெசார் சாலையில் ஹொன்டா EX5 மோட்டார் சைக்கிளில் வந்துக் கொண்டிருந்த 62 வயதுடைய அந்த மாது பொருட்களை ஏற்றி வந்த லோரிவுடன் மோதப்பட்டு மரணமடைந்துள்ளனர் .
மேலும் , சம்பவம் நிகழ்ந்த பாயா பெசார் நான்கு முஞ்சந்தி சமிஞ்சை விளக்கில் கண்மூடித்தனமாக லோரி வந்து மோட்டார் சைக்கிளின் பின் பகுதியில் மோதப்பட்டத்தால் இச்சாலை விபத்து ஏற்பட்டத்தாக ரிட்சுவான் கூறினார். இச்சம்பவம் செக்ஷன் 41(1) சாலை போக்குவரத்து 1987 சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்படும் என்றார் .