பேருந்து மற்றும் ரயில் போக்குவரத்து சேவையை நாள் ஒன்றுக்கு சராசரி 10 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாக அவ்விரு போக்குவரத்து சேவைகளையும் நிறுவகித்து வரும் Prasarana நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 21-ஆம் தேதி மேற்கொள்ளப்பட்ட கணகெடுப்பின் வழி இது தெரியவந்துள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சமாக, கடந்த மார்ச் 16-தேதி, பிரதமர் Dato Sri Anwar Ibrahim-ஆல் அதிகாரப்பூர்வமாக தொடக்க விழா கண்ட Putrajaya MRT (II) வழித்தடதிற்கான ரயில் சேவையை நாள் ஒன்றுக்கு, 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் Putrajaya-விற்கும் Damansara-விற்கும் இடையிலான இந்த MRT ரயில் மற்றும் பேருந்து சேவையை பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் நோக்கில், மார்ச் 31-ஆம் தேதி வரை, இலவச பயண சேவையை Prasana வழங்கி வருவதாக அது குறிப்பிட்டுள்ளது.