கடந்த திங்கட்கிழமை, ஒரு தம்பதியினரால், பணம் பட்டுவாட அட்டை ஒன்று களவாடப்பட்டதில், பணி ஓய்வுப் பெற்ற முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் 46 ஆயிரம் வெள்ளியை இழந்தார்.
அத்தம்பதியினர், அந்தப் பணப்பட்டுவாடா அட்டையைப் பயன்படுத்தி விலை மதிப்புடைய தொலைபேசி ஒன்றை வாங்கிய போது, அவர்களின் அடையாளம் அக்கடையின் ரகசிய கேமராவில் பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் 25 ஆம் தேதி, காலை 10 மணியளவில், அந்த முன்னாள் அரசாங்க ஊழியரின் ஏடிஎம் அட்டை, பந்திங்கில் உள்ள ஒரு வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் மாட்டிக்கொண்டதையடுத்து, வங்கிக்கு வந்த அறிமுகமில்லாத நபர் ஒருவர், உதவி செய்வதாகக் கூறி அந்த ஏடிஎம் அட்டையைத் திருடிச் சென்றதாக கோலா லங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் சுபரிதென்டன் அகமட் ரிட்வான் முகமட் நூர் தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில், 1997 கணினி குற்றவியல் சட்டம் பிரிவு 4 கின் கீழ் விசாரணை நடத்தப்படுவதாக இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் அகமட் ரிட்வான் குறிப்பிட்டார்.