AI, TVET பயிற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும்

ஜார்ஜ்டவுன், மே 06-

AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இளைய தலைமுறையினர்களுக்கு அதிகமான பயிற்சிகள் அளிப்பதில் அதீத கவனம் செலுத்துமாறு அமைச்சகத்தை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டார்.

மாஹாட் தாஹ்ஃபிஸ் மாணவர்கள் உட்பட ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அமைச்சகம் அல்லது அரசு நிறுவனங்கள் வழங்கப்படும் திட்டங்களிலிருந்து அனைவருமே பயனடைய முடியும் என்பதை உறுதி செய்வதற்கு தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி பயிற்சியான (TVET) அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

முதலீட்டாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு TVET திட்டம் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும். மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு, மைக்ரோசாப்ட்டில் 10.5 பில்லியன் வெள்ளி முதலீடு செய்யபட்டுள்ளது.

தற்போது, இதற்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தேவைப்படுவதாக பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி, மலேசியாவில் தற்போது 30,000 பொறியாளர்கள் தேவைப்படுகின்றனர் என்று பிரதமர் மேலும் கூறினார்.

நகர்புற மற்றும் கிராமப்புறங்களிடையே வேறுபாடுகளை தவிர்ப்பதற்கு AI மற்றும் TVET ஆகிய திட்டங்கள் குறித்த பயிற்சிகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் வாய்ப்பாக சென்றடைய வேண்டும் என்று பிரதமர் அன்வார் கருத்து தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்