Kulim Hi-Tech Park காவல் நிலையத்திற்கு விருது

கெடா மாநில தலைமை காவல் நிலையத்தை பிரதிநிதித்து, கூலிம் ஹய் தேக் பார்க் ( Kulim Hi-Tech Park ) காவல் நிலையத்திற்கு மலேசியாவின் சிறந்த காவல் நிலையம் என்ற விருதினை மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியம் வழங்கி சிறப்பு செய்தது.
மலேசிய குற்றத் தடுப்பு அறவாரியம், இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நகரப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் குறிப்பிட்ட சில விதிமுறைகளை பின்பற்றி, அவற்றின் அடைவு நிலையை அடிப்படையாக கொண்டு சிறந்த காவல் நிலையத்தை தேர்வு செய்து, விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.


அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற தேர்வுப் பட்டியலில் Kulim Hi-Tech Park காவல் நிலையம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. சிறந்த காவல் நி​லையத்தின் தேர்வுக்குரிய கூறுகளில் அனைத்து பிரிவுகளிலும் Kulim Hi-Tech Park, காவல் நிலையம் முதன்மை இடத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கோலாலம்பூர், செராஸில் உள்ள அரச மலேசிய காவல் துறை பயிற்சி மையத்தில் நடைபெற்ற விருதளிப்பு சடங்கி​ல் உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail, இவ்விருதினை வழங்கி சிறப்பு செய்தார்.


கெடா மாநில தலைமை காவல்துறை அதிகாரி டத்தோ வான் ஹாசான் வான் ஹமாட் , கூலிம் மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி சூப்ரிண்டெண்டன் ரிட்சுவான் பின் சலே மற்றும் Kulim Hi-Tech Park காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி இன்ஸ்பெக்டர் வாசு குப்புசாமி ஆகியோர் அவ்விருதினை அமைச்சர் Saifuddin Nasution னிடமிருந்து பெற்றுக் கொண்டனர் .

WATCH OUR LATEST NEWS

செய்தி பட்டியல்

பின்தொடரவும்