May 21, 2026
Thisaigal NewsYouTube
உணவுக்காகக் கொடிய விலங்கை வேட்டையாடிய 5 மியான்மார் நாட்டவர் கைது
தற்போதைய செய்திகள்

உணவுக்காகக் கொடிய விலங்கை வேட்டையாடிய 5 மியான்மார் நாட்டவர் கைது

Share:

பாதுகாக்கப்பட்டக் கொடிய வனவிலங்குகளை உணவுக்காகவும் அதன் உடல் உறுப்புகளுக்காகவும் வேட்டையாடிய கும்பல் கைது செய்யப்பட்டது.

கடந்த சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில், கோல லிப்பிசில் உள்ள டுரியான் தோட்டத்தில் இருந்த வீட்டில் நடத்தப்பட்டச் சோதனையில், இந்த விவகாரம் அம்பலமானது என வனவிலங்கு பாதுகாப்பு, வனப்பூங்கா துறையின் டத்தோ அப்துல் கடிர் அபு ஹஷிம் தெரிவித்தார்.

அந்தச் சோதனையில் Asian glossy starling, Lesser coucal, Chestnut-breasted malkoha ஆகிய பறவைகளின் இறகுகளையும் Great argus பறவையில் கால்களையும் வைத்திருந்த 5 மியான்மார் நாட்டவர் கைது செய்யப்பட்டனர் என அப்துல் கடிர் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்டவை கோல லிப்பிஸ் மாவட்டக் காவல் துறை தலைமையகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள், பாதுகாக்கப்பட்ட வன விலங்குகளை உணவுக்காகவும் கால், நகம், இறகுகள், தோல் ஆகியவற்றை சேகரித்து வைத்திருந்ததாக அப்துல் கடிர் கூறினார்.

Related News

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது