May 21, 2026
Thisaigal NewsYouTube
பால் குடிக்கும் போது 4 மாதக் குழந்தை இறந்தது
தற்போதைய செய்திகள்

பால் குடிக்கும் போது 4 மாதக் குழந்தை இறந்தது

Share:

கடந்த செவ்வாய்க்கிழமை, 4 மாத ஆண் குழந்தை பால் குடிக்கும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. சிகிச்சைப் பலனில்லாமல் அக்குழந்தை நேற்று உயிரிழந்தது.

இது குறித்து தகவல் அளித்த புத்ராஜெயா மாவட்டக் காவல் துறை தலைவர் எசிஸ்தன் கமிஷ்னர் எ அஸ்மாடி அப்துல் அசிஸ் தெரிவிக்கயில், அக்குழந்தைக்கு முதலுதவி அளிக்க மருத்துவமனையில் இருந்து அக்குழந்தை விடப்பட்டிருக்கும் காப்பகத்திற்கு காலை 10.30 மணிக்கு விரைந்தனர்.

52 வயதுடைய அக்குழந்தையின் பெண் பராமறிப்பாளர் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில், அக்குழந்தையின் உடல் 45 டிகிரி கோணத்தில் சரியான நிலையில் வைக்கப்பட்டு பால் கொடுக்கப்பட்டபோது, அக்குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது என எ அஸ்மாடி தெரிவித்தார்.

குழந்தை மயக்கமடைந்ததைத் தொடர்ந்து குழந்தையின் பெற்றோருக்கு தொலைப்பேசி அழைப்பு வழி தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் அந்தக் குழந்தை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு ஐ சி யூ வில் அனுமதிக்கப்பட்டது.

சிகிச்சை பலனில்லாமல், நேற்று மதியம் 3 மணிக்கு அக்குழந்தை உயிரிழந்தது.

முதற்கட்ட விசாரணையில், அந்தப் பராமறிப்பாளர் 4 குழந்தைகளை கடந்த மூன்று ஆண்டுகளாக கவனித்து வருவதாகசும் சமூக நல இலாகாவின் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வருவதாகவும் எ அஸ்மாடி கூறினார்.

Related News

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

விரைவுப் பேருந்து தீப்பற்றி எரிந்தது: 17 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட்  பொருட்கள் பறிமுதல்

ஐஸ் லோரியில் 1,000 லிட்டர் டீசல் கடத்தல்: முதியவர் கைது; 38,005 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

பேராக் ஆலய நிலப் பிரச்சினைகளில் 40% தீர்வு; தீர்க்கப்படும் வரை ஆலயங்கள் இடிக்கப்படாது: டத்தோ சிவநேசன் உறுதி

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

கிள்ளான் விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்த வழக்கு: குற்றச்சாட்டை மறுத்த 75 முதியவர் விசாரணை கோரினார்

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

காசா மனிதநேய செயற்பாட்டாளர்களை மீட்பதில் அன்வார் தீவிரம் / துருக்கி அதிபருடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது

அரச குடும்பத்தை அவமதிக்கும் உள்ளடக்கங்கள்: டிக்டாக் நிறுவனத்திற்கு எம்சிஎம்சி சட்ட நோட்டீஸ் அனுப்பியது