May 21, 2026
Thisaigal NewsYouTube
ரஃபேல் நடாலின் ஓய்வுக்கால உணர்வுபூர்வமான போராட்டம்: புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத் தொடரில் வெளிப்படையான பதிவுகள்
விளையாட்டு

ரஃபேல் நடாலின் ஓய்வுக்கால உணர்வுபூர்வமான போராட்டம்: புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத் தொடரில் வெளிப்படையான பதிவுகள்

Share:

பிரபல டென்னிஸ் ஜாம்பவானான ரஃபேல் நடால், தனது டென்னிஸ் வாழ்க்கையின் இறுதிப் பக்கங்கள் மற்றும் ஓய்வு பெற எடுத்த கடினமான முடிவு குறித்து நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள புதிய ஆவணப்படத் தொடரில் மிகவும் உண்மையாகவும் வெளிப்படையாகவும் பேசியுள்ளார். மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்தத் தொடரின் முன்னோட்ட நிகழ்வில் ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மண்ண்தரையின் ராஜா என்று அழைக்கப்படும் நடால், தனது 20 ஆண்டுகாலப் பயணத்தில் 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று 2024 இறுதிப் பகுதியில் டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவரது இறுதிப் போட்டி காலங்களில் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம், அனைத்தையும் மிகைப்படுத்திக் காட்டாமல் அவர் எதிர்கொண்ட இன்னல்களையும், இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் 100 விழுக்காடு முழுத் திறனை அடைய முடியாமல் போன இக்கட்டான சூழலையும் இணையாகக் காட்டும் ஒரு உண்மையான பதிவாக இருக்கும் என்று நடால் குறிப்பிட்டுள்ளார்.

காயங்கள், சந்தேகங்கள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் அந்த எதார்த்த சூழ்நிலையைத் தான் எவ்வாறு ஏற்றுக்கொண்டேன் என்பதை விவரிக்கும் இந்த நான்கு பகுதிகள் கொண்ட ஆவணப்படத் தொடர், அவர் 14 முறை சாம்பியன் பட்டம் வென்ற பிரெஞ்சு ஓபன் தொடரின் போது, வருகிற மே 29 அன்று நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

Related News

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தோல்வி: பயிற்சியாளர் சாடல்

மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தோல்வி: பயிற்சியாளர் சாடல்

காசாவுக்கு உதவிக்கப்பல்: 16 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிறைபிடித்த இஸ்ரேல் இராணுவத்திற்கு அன்வார் கடும் கண்டனம்!

காசாவுக்கு உதவிக்கப்பல்: 16 மலேசியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை சிறைபிடித்த இஸ்ரேல் இராணுவத்திற்கு அன்வார் கடும் கண்டனம்!

உலகக் கோப்பை செபாக் தக்ரோவின் குவாட்ரண்ட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து

உலகக் கோப்பை செபாக் தக்ரோவின் குவாட்ரண்ட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற மலேசிய அணிக்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் வாழ்த்து

செபக் தக்ரா உலகக்கோப்பை 2026  குவாட்ரண்ட் பிரிவில் மலேசியா வெற்றி - பிரதமர் அன்வார் வாழ்த்து

செபக் தக்ரா உலகக்கோப்பை 2026 குவாட்ரண்ட் பிரிவில் மலேசியா வெற்றி - பிரதமர் அன்வார் வாழ்த்து

விளையாட்டுத் துறை நிதியிலும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கான நிதியிலும் எந்தக் குறைப்பும் இருக்காது - பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி

விளையாட்டுத் துறை நிதியிலும் விளையாட்டு வீரர்களின் நலனுக்கான நிதியிலும் எந்தக் குறைப்பும் இருக்காது - பிரதமர் அன்வார் இப்ராகிம் உறுதி

ரசிகர்களின் அதிருப்திக்கு இடையே ரியல் மாட்ரிட் அணி வெற்றி: எம்பாப்பேவுக்கு எதிராக மைதானத்தில் கூச்சல்

ரசிகர்களின் அதிருப்திக்கு இடையே ரியல் மாட்ரிட் அணி வெற்றி: எம்பாப்பேவுக்கு எதிராக மைதானத்தில் கூச்சல்