ஜன.11-
PAS கட்சி தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருவதாகவும், குறிப்பாக நஜிப் ரசாக்கிற்கான ஆதரவு பேராணிக்குப் பிறகு மக்களின் அன்பு அதிகரித்துள்ளதாகவும் PAS இளைஞர் பிரிவுத் தலைவர் Afnan Hamimi Taib Azamudden தெரிவித்துள்ளார். PAS கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இப்போது உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது என்றும், இது அக்கட்சிக்கு கிடைத்துள்ள வரவேற்பை காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அம்னோ, பெர்சாத்து ஆகிய இரு கட்சிகளுடனும் PAS நெருங்கிய உறவைப் பேண முயற்சிக்கிறது என்ற விமர்சனங்களுக்கு பதிலளித்த Afnan, அவ்விரு கட்சிகளும் ஒரே கூட்டணியில் இருப்பதாகவும், அந்த கூட்டணி மேலும் வலுப்பெற்று வருவதாகவும் கூறினார். PAS அம்னோவுடன் இரகசிய உறவு வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை அவர் மறுத்துள்ளார்.